Header Ads



8 மாத கர்ப்பிணித் தாய், அடித்துக் கொலை


அனுராதபுரத்தில் இளம் கர்ப்பிணிப் பெண்ணை கணவன் கொடூரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


பதவியா பகுதியை சேர்ந்த 27 வயதான ருவந்தி மங்கலிகா கொலை செய்யப்பட்டுள்ளார்.


எட்டு மாத கர்ப்பிணித் தாய் நேற்று முன்தினம் சந்தேக நபரான கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிள்ளையின் கற்றல் நடவடிக்கையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறி கொலையில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தாயை, தந்தை தாக்குவதை அவதானித்த இரண்டாம் தரத்தில் கல்வி கற்கும் பிள்ளை அயலவர்களின் உதவியை நாடியுள்ளது.


விரைந்து செயற்பட்ட அயல்வீட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்த போதும், குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் 33 வயதுடைய சந்தேக நபரான கணவரைக் கைது செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.