Header Ads



7 இலட்சம் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு இலவச காலணி -


250 இற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அனைத்து மாணவர்களுக்கும் இந்த ஆண்டு இலவச காலணி   வழங்கப்படும். இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு  இவ்வாறு காலணிகள் வழங்கப்படும் எனப்  பிரதமரும், கல்வி அமைச்சருமான  ஹரிணி அமரசூரிய  தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில்   வியாழக்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல  விடைக்கான வினா நேரத்தில்  அரச தரப்பு எம்.பி.யான  ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே  இதனைத் தெரிவித்த அவர்  மேலும்  கூறுகையில்,


பாடசாலைகளில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வள பற்றாக்குறைக்கு கட்டம் கட்டமாக தீர்வு காண்பதற்கு கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.பாடசாலைகளுக்கு சமமான வளங்களை பகிர்ந்தளித்தால் பாடசாலைகளுக்கு இடையில் போட்டித்தன்மை ஏற்படாது


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும்  நலன்புரித் திட்டங்களை  விரிவுப்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக  250 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு  இந்த ஆண்டு  இலவச காலணி வழங்கப்படும்.இதற்கமைய சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு  இவ்வாறு காலணிகள் வழங்கப்படும்.


No comments

Powered by Blogger.