Header Ads



76,000 ரூபாவாக விற்கப்பட்ட, புற்றுநோய் தடுப்பு மருந்து 370 ரூபாவாக குறைப்பு


ஒரு காலத்தில் ரூ.76,000க்கு விற்கப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்து தற்போது ரூ.370 ஆக குறைக்கப்பட்டுள்ளது என, வைத்தியத்துறை வட்டாரங்கள் டெய்லி மிரருக்கு உறுதிப்படுத்தின.


ஆதாரங்களின்படி, 2018 ஆம் ஆண்டில், குறித்த தடுப்பு மருந்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.76,000 ஆக இருந்தது, பின்னர் அது ரூ. கடந்த ஆண்டு 54,000 ரூபாயாக குறைக்கப்பட்டது.


புதிய அரசாங்கத்தின் கீழ், மூன்று புதிய விநியேதகத்தர்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஒரே நிறுவனம் முன்பு வைத்திருந்த ஏகபோகத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, விலை ரூ.370 ஆக குறைந்தது.


இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி அண்மையில் கருத்து வெளியிடுகையில், சுகாதார அமைச்சினால் மாதந்தோறும் பல பில்லியன் ரூபா பெறுமதியான காலாவதியான மருந்துப்பொருட்கள் அழிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


"இந்த மருந்துகள் அகற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புத்தளம் சீமெந்து தொழிற்சாலைக்கு எரிப்பதற்காக அனுப்பப்படுகின்றன," என்று அவர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.