Header Ads



கொழும்பின் நாளாந்த 6200 மெட்ரிக்தொன் கழிவுகள் புத்தளத்திற்கு


அருவக்காடு குப்பை மீள்சுழற்சி செயற்றிட்டத்தை அடுத்த 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண அமைச்சு தெரிவிக்கின்றது.


பல்வேறு காரணிகளால் குறித்த செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.


அருவக்காடு பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குறைபாடுகளை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கொழும்பு, புறநகர் பகுதிகளிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள குப்பைகளை ரயில் மூலம் அருவக்காட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர கருணாதிலக்க குறிப்பிட்டார்.


நாளாந்தம் 6200 மெட்ரிக் தொன் கழிவுகளை அருவக்காட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் திட்டமிடல் சிக்கல்களால் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

No comments

Powered by Blogger.