நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து அரசுக்கு 4 கோடி ரூபா பணம்
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு சிறைச்சாலை நிர்வாகம் கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியில் 4 கோடி ரூபா பணத்தை அரசாங்கத்திற்கு
மீதப்படுத்திக் கொடுத்துள்ளது. இது முன்னைய வருடங்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக மீதப்படுத்தப்பட்டுள்ளன.
2022 ம் ஆண்டில் ஒரு கோடி 13 இலட்சம் ரூபாவும் 2023 ல் ஒரு கோடி 95 இலட்சம் ரூபாவும் மீதமாகியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊழல், மோசடி, வீன்விரயம் என்பவற்றைக் கட்டுப்படுத்தியதன் மூலம் இப்பாரிய தொகை மீதமாகியுள்ளது.
சிறைக்கைதிகளை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்கு உணவுவகைகளை கொண்டுவந்து கொடுப்பதனால் அவை தொடர்பான தரவுகளைப் பெற்றுக்கொண்டு தேவையானவர்களுக்கு மாத்திரம் உணவு தயாரிக்கப் படுகின்றன. வீன்விரத்தை தடுத்து தரமான உணவை சமைக்கின்றனர்.
கைதிகள் சாப்பிட்டபின்னர் வீசும் உணவு வகைகளை உரிய முறையில் சேகரித்து பன்றி உணவுக்காக விலை மனு கோரல் மூலம் வெளியாருக்கு விற்கப்படுகின்றன. பயன்படுத்தப்பட்ட தேங்காய்களின் சிரட்டைகளையும் விலை மனு மூலம் வெளியே விற்கப்படுவதுண்டு.
லயன்ஸ் கழக அனுசரனையில் வாசிகசாலை வசதி, விளையாட்டு உபகரணங்கள், தேவையானவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கள், சுகாதார வசதிகள் போன்றன செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
820 சிறைக் கைதிகளுக்கான வசதிகள் இங்கு இருந்த போதும் தற்போது சுமார் 1700 சிறைக்கைதிகள் உள்ளனர். 6 மாதத்திற்கு குறைவான சிறை தண்டனை பெற்றவர்களும் விளக்கமறியல் கைதிகளுமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் உள்ளனர்.
இதேவேளை ஆளனி பற்றாக்குறையும் நிலவுகின்றன.
2018 ஆண்டின்படி பணியாளர் எண்ணிக்கை 270 ஆகும். ஆனால் தற்போது 142 பேர்களே உள்ளனர்.
கடந்த மூன்று வருடங்களாக போதைப் பொருட்கள் உள்ளே கொண்டுவருவது கையடக்க தொலைபேசி பாவணை தடுக்கப்பட்டுள்ளன.
சிசீரிவி கமரா மூலம் கண்கானிக்கப்படுவதுடன் கையடக்க தொலைபேசிகளை செயலிழக்கச் செய்யும் "ஜேமர்" பொறுத்தப்பட்டுள்ளன.
வெளியே உறவினர்களுடன் கதைக்க வேண்டிய சந்தர்பம் ஏற்பட்டால் அதற்கான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. மேலும் கடிதம் அனுப்புவதற்கான ஏற்பாடு உள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள், ஊழியர்களின் அர்ப்பனிப்புடனான சேவை மூலமே இலக்கை அடைய முடிந்து உளளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment