Header Ads



சட்டவிரோதமாக 400 வாகனங்கள் விற்பனை - சூத்திரதாரி பிடிபட்டான்


செசி இலக்கம் மற்றும் இயந்திரம் என்பவற்றை மாற்றி சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்த வலையமைப்பு ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மீரிகம பகுதியில் வைத்து அவர் இன்று -10- கைது செய்யப்பட்டுள்ளார். 


குறித்த நபர் உழவு இயந்திரமொன்றின் போலி இலக்கத்துடன், போலி ஆவணங்களை பயன்படுத்தி, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் ஜீப் ரக வாகனமொன்றை பதிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 


குறித்த சந்தேகநபர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட நகரசபையின் முன்னாள் உறுப்பினராவார்.


அத்துடன் சந்தேகநபர் பல வருடங்களாக இவ்வாறு போலி இலக்கத் தகடுகளின் கீழ் வாகனங்களை பதிவு செய்து அவற்றை விற்பனை செய்து வந்துள்ளமையும், தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


இவ்வாறான வாகன வர்த்தகம் தொடர்பில் முன்னதாகவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


No comments

Powered by Blogger.