ஜனாதிபதியின் சீன விஜயத்தின் 3 ஆவது நாள் வெற்றிககரமாக நிறைவு
- சீனாவில் உள்ள பல முன்னணி உற்பத்தி கைத்தொழிற்சாலைகளையும், வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமமொன்றையும் பார்வையிட ஜனாதிபதி நாளை செல்கிறார்
- சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடனும் நாளை விசேட கலந்துரையாடல்
சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாளான இன்று (16), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இலங்கைக்கு பல அனுகூலங்களைப் பெற்றுத் தரும் பல விசேட கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
அதன்படி, இன்று காலை (16)ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட முதலீட்டு அமர்வு நடைபெற்றதோடு இதில் முன்னணி சீன நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அதன்பிறகு, உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்ங்களுடன் கூடிய நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தினார். சீனா பெட்ரோகெமிக்கல் கூட்டுத்தாபனம்- சினோபெக் குழுமம் (China Petrochemical Corporation-SINOPEC Group)சீன தொலைத்தொடர்பு நிர்மாண நிறுவனம் (China Communications Construction Company Ltd),சீன மேர்சண்ட் குழுமம் (China Merchants Group (CMG), ஹுவாவி (Huawei),வாகன உற்பத்தித் துறையில் பிரபலமான நிறுவனமான பி.வை. டி ஒட்டோ (BYD Auto) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அவற்றில் அடங்கும்.
சினோபெக் குழுமத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு 3.7 பில்லியன் டொலர் மதிப்புள்ள பாரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றுக் கொடுக்கும் ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதே வேளை, இன்று பிற்பகல் சீன மக்கள் மாவீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இணைந்து கொண்டார்.
பின்னர் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவர் ஜாவோ லெஜியை ஜனாதிபதி சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீனப் பிரதமர் லீ சியாங்விற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடந்த கால நட்புறவை நினைவுகூரும் வகையில் ஜனாதிபதிக்கும் சீனப் பிரதமருக்கும் இடையில் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றது. "வளமான நாடு - அழகான வாழ்க்கையை" உருவாக்க தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கும் என்று சீனப் பிரதமர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாளான நாளை (17) சீனாவில் உள்ள பல முன்னணி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்கிறார். வறுமை ஒழிப்புக்கு முன்மாதிரியான சீன கிராமம் ஒன்றையும் அவர் பார்வையிடவுள்ளார்.
சிசுவான் மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளருடன் ஜனாதிபதி நாளை விசேட கலந்துரையாடலில் இணைந்து கொள்கிறார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவை அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங், சீனாவிற்கானசினோபெக் இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தப் விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
16-01-2025
Post a Comment