Header Ads



செல்வந்தர்களின் 35 பில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவையில் உள்ளது - நடுத்தர மக்களை பழிவாங்குவது முறையற்றது


(இராஜதுரை ஹஷான்)


செல்வந்த தரப்பினரின் 35 பில்லியன் ரூபா மின்கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்து நடுத்தர மக்களை பழிவாங்குவது முறையற்றதொரு செயற்படாகும்.


மின்சார சபை இலாபமடைந்துள்ள நிலையில் இம்முறை மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25 சதவீதத்திலேனும் குறைக்க வேண்டும் என தேசிய மக்களவை அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.


மின் பாவனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் சனிக்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.