இலங்கை சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும், இனவாதிகளின் ஒப்பாரியும்
இதிலுள்ள சரி பிழைகளுக்கப்பால், இவ்விடுவிப்பானது சுங்க அதிகாரிகளின் முடிவேயன்றி இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை. கொள்கலன்களின் நெரிசலை கட்டுப்படுத்த சுங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்கு முறையே இது. இதில் ஏதும் ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என அரசாங்கம் ஏற்கனவே சுங்க அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதையும் ஒரு படி தாண்டி, இக்கொள்கலன்கள் தற்போதைய மேல்மாகாண ஆளுனர் ஹனீப் யூசுப் இற்கு சொந்தமானவை என்றும், அதையும்தாண்டி பொந்துக்குள் ஒழிந்து கொண்டிருந்த கடைந்தெடுத்த பிரபல இனவாதிகளான மங்கன்பில, விமல் தீரவங்ச போன்றோர், இது ஏதோ ஒரு முஸ்லிம் அரசியல்வாதியான இவ் ஆளுனரால் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது போலவும் ஓர் விம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி, மீண்டும் அதே துர்நாற்ற இனவாத அரசியலை மீள ஆரம்பிக்க முயற்சிப்பதாக தெரிகிறது.
இது சம்மந்தமாக, 323 கொள்கலன்களில் யூசும் ஹனீப் இன் நிறுவனமான Expo Lanka வுக்கு உரித்தான எந்த ஒரு கென்டெயினரும் உள்ளடக்கப்படவில்லை எனவும், மேல்மாகாண ஆளுனருக்கும் இந்த கொள்கலன்களுக்கும் எந்த தொடர்புமில்லையெனவும் சுங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கொழும்பு துறைமுகமும் சுங்கமும் வழமைபோல் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.
கடந்தகால ஊழல் பேர்வழிகளின் கைதுகளில் ஆடிப்போயுள்ளவர்கள், இவற்றை திசைமாற்ற எடுக்கும் ஓர் யுக்தியே இவ்விடையத்தில் அரசின்மேல் பழி போடுவதும், இதை வைத்து இனவாத அரசியலை மீள கட்டியெழுப்ப முயற்சிப்பதுவும்.
இலங்கை,
📊 Fitch rating இல் முன்னேறி, “கடன் வாங்க கூட தகுதியில்லாத நாடு” என்ற நிலையிலிருந்து மீண்டிருக்கிறது.
📊 Colombo Stock Exchange யில் வரலாறு காணாத முன்னேற்றமடைந்திருக்கிறது.
📊 ரூபாவின் பெறுமதி கூடியிருக்கிறது.
📊 பொருளாதாரம் முன்னேறி வருகிறது.
📊 ஊழல் பேர்வழிகள் கைதுசெய்யப்படுவதோடு, அரச வீண் செலவுகள் குறைக்கப்படுகின்றன.
📊 இனவாதம் கணிசமான அளவு இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது.
📊 ஏற்றுமதி, சுற்றுலாத்துறை முன்னேற்றமடைந்திருக்கிறது.
📊 அரசியல்வாதிகளுக்கு விசேட சலுகைகளில்லை, அவர்களின் உறவினர்கள் பதவிகளில் அமர்த்தப்படவில்லை.
எனவே, பல சவால்களோடும், சில குறைபாடுகளுடனும், நாடு நல்லதொரு இலக்கை நோக்கி பயணிக்கிறது,
எனவே, இவ்வாட்சியை கவிழ்க்க contents தேடும் சில மீடியாக்களின் செய்திகளை நம்பி ஏமாறாதீர்கள்.
ஆதம்பாவா ஜலீல்
31-01-2025
Post a Comment