ருமேனியாவுக்கு ஆட்களை அனுப்புதல் - 30 பிடியாணைகள் உள்ள தம்பதி கைது
வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.
30 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் வீடு ஒன்றில் ஒளிந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தம்பதியினர் ருமேனியாவில் வேலைக்காக அனுப்புவதாக கூறி சுமார் 30 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளது.
சந்தேக நபரான தம்பதியினருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றத்தில் 30 பிடியாணைகளும், கணவருக்கு எதிராக 16 பிடியாணைகளும், மனைவிக்கு எதிராக 14 பிடியாணைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 55 வயதுடையவர் எனவும் அவரது மனைவி 48 வயதுடைய பெண் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28க்கும் மேற்பட்ட நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து நிதி மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
Post a Comment