பார்வையற்ற 2 இலங்கைச் சிறுமிகளை குடும்பத்துடன் உம்ரா செய்ய அழைத்துள்ள சவுதி அரேபியா
சவுதி அரேபியா, பார்வையற்ற 2 இலங்கைச் சிறுமிகளை தங்கள் குடும்பத்துடன் உம்ரா செய்ய அழைத்துள்ளது.
அவர்கள் எப்போதோ உம்ராவைச் செய்ய விரும்பினார்கள் என்றும், ஆனால் போதுமான வளங்கள் தங்களுக்கு இல்லாமையால் வாய்ப்பு கிட்டவில்லை எனவும், சவுதி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது இலங்கைக்கான தூதுவராக பணியாற்றி வரும் காலித் ஹமத் நஸார் அல்கஹ்தானி, இருநாடுகளுக்கும் உறவுகளை வளர்க்க முன்னுரிமை வழங்குவதுடன், இலங்கையில் குர்ஆன் மனனப் போட்டியை ஏற்பாடு செய்து வருகின்றமையும், குர்ஆனை ஓதுவதில் திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகளை நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment