இலங்கையை உலுக்கிய சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் கொண்டு எழுதப்பட்ட 2 நூல்கள் வெளியாகின்றன
பேராசிரியர் ராஜன் ஹூல் ஆங்கிலத்தில் எழுதிய "SRI LANKA'S EASTER TRAGEDY .Wheh the deep state gets out of its depth" என்ற ஆங்கில நூலை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் பி. ஏ தமிழில் மொழி பெயர்த்துள்ளார். அன்று வெளியிடப்படும் அடுத்த நூல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த "WE ARE A PART NOT APART -Demystifying Myths Against Muslims of Sri Lanka" என்ற நூலின் தமிழாக்கம் ஆகும் .
இந்த நூல்கள் இரண்டினதும் ஆய்வுரையை பேராசிரியர் எம்.எஸ். எம் அனஸ் நிகழ்த்துவதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் , சிரேஷ்ட ஊடகவியலாளர் மஹிந்த ஹத்தக்க , ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவர் என் .எம்.அமீன் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
இவ்விரு நூல்களும் அண்மை காலத்தில் இலங்கையை உலுக்கிய அதிர்ச்சியான சம்பவங்களையும், அச்சுறுத்தல்களையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
Post a Comment