2 மாணவர்கள் உயிரிழப்பு
தம்புத்தேகம - நொச்சியாகம வீதியில் பி ரனோரவ பகுதியில் பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என கலடிவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய இரண்டு பாடசாலை மாணவர்களான ஜெயக்கொடி ஆராச்சிலகே மிலிந்த சம்பத் மற்றும் ஜெயநந்தன புஷ்பகுமாரகே கவிது மதுஷான் ரத்நாயக்க ஆவர். இருவரும் பி. ரனோரவையில் உள்ள கலடிவுல்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள்.
கண்டியிலிருந்து நொச்சியாகம நோக்கி பயணித்த பஸ்ஸுடன், குறித்த இரண்டு மாணவர்களும் மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment