24 மணித்தியாலங்களுக்குள் லொஸ் ஏஞ்சல்ஸ் தீ, தீவிரமடையும் வாய்ப்பு குறித்து கவலை
லொஸ் ஏஞ்சல்ஸின் ஈட்டின் மற்றும் பலிஸ்தெஸ் (Palisades) காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் அழிவுகள் என்பன அமெரிக்க வரலாற்றில் இரண்டாவதும் நான்காவதுமான பாரிய காட்டுத்தீ அழிவாக பதிவாகியுள்ளது.
பலிஸ்தெஸ், ஈட்டின் மற்றும் ஹெர்சில் (herzl)காட்டுத்தீயால் 60 வீதமான நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லொஸ் ஏஞ்சல்ஸின் ஏன்ஜல்ஸ் தேசிய சரணாலயம் மற்றும் சென் கெப்ரியல் (San Gabriel) தேசிய அருங்காட்சியகம் என்பன காட்டுத்தீ அபாயத்தால் மூடப்பட்டுள்ளன.
காட்டுத்தீ அபாயத்தை கருத்திற்கொண்டு குறித்த இடங்களுக்கு செல்லும் வீதிகள் தற்போது தடை செய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தடையை மீறுவோருக்கு 10,000 அமெரிக்க டொலர் அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயால் சேதமடைந்த வீடுகளை அண்மித்து முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 24 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மற்றும் பலர் காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
வானிலையில் நிலவும் சீரற்ற தன்மையால் நிலைமை மேலும் அபாய நிலையை எட்டுமென வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment