தமிழ்நாடு அரசின் "அயலகத் தமிழர் தினம் 2025" - அதிதிகளில் ஒருவராக ஹக்கீம்
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் மற்றும் மறுவாழ்வுத்துறையின் ஏற்பாட்டில், "அயலகத் தமிழர் தினம் 2025" நிகழ்வுகள் ,"எத்திசையும் தமிழணங்கே" என்ற தொனிப் பொருளில் சென்னை ,நந்தம்பாக்கம் மத்திய வர்த்தக மையத்தில் சனிக்கிழமை (11 ஆரம்பமாகி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (12) யும் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (12)அமர்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதம அதிதியாகத் தலைமை தாங்கி, விருதுகளை வழங்கி வைத்ததோடு, பேருரையும் ஆற்றினார்.
மொரிஷியஸ், சிங்கப்பூர் ,மலேசியா, இலங்கை ,ஐக்கிய அரபு ராஜதானி, அமெரிக்கா,இங்கிலாந்து தென் ஆபிரிக்கா , ரியூனியன் தீவு போன்ற அனேக நாடுகளிலிருந்து அதிதிகள் இந்நிகழ்வுகளுக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.
தமிழக அரசினால் சிறப்பு அதிதிகளில் ஒருவராக இலங்கையிலிருந்து அழைக்கப் பட்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமும் இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். வெவ்வேறு அமர்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
Post a Comment