2024 இல் 1,958,088 மில்லியன் ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்த திணைக்களம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது.
அதற்கமைய, 1,958,088 மில்லியன் ரூபா என உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 392,229 மில்லியன் ரூபா அதிகரிப்பு எனவும் இதன் வளர்ச்சி வீதம் 25.1 வீதம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment