Header Ads



அடுத்த 20 வருட திட்டத்துடன் NPP பயணிக்கிறது - அமைச்சர் நளிந்த


இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறைக்கு இதுவரையில் ஒதுக்கப்படாத அதிகளவிலான நிதி ஒதுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 


அத்துடன், இனிவரும் காலங்களில் அரசியல் நோக்கங்களுக்காகவோ அல்லது தனியார் நோக்கங்களுக்காகவோ வைத்தியசாலை கட்டமைப்பில் நிர்மாணங்களை முன்னெடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


சுகாதார அமைச்சுக்கு எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத தொகையை இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில்  ஒதுக்கப்படும் எவரேனும் ஒருவர் வைத்தியசாலையை கண்காணித்து விட்டு, கவலை மனப்பாங்கில் அந்த வைத்தியசாலையின் கட்டடங்களை நிர்மாணிக்க முடியாது. 


தமது அரசாங்கம் அடுத்த 20 வருடங்களுக்கான தேசிய திட்டத்துடன், பயணிக்கிறது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


ஆகையால், எதிர்காலங்களில் தேசிய திட்டத்திற்கு அமையவே வைத்தியசாலைகளில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.