2 வயது குழந்தையை, கொலை செய்த தாய்
அநுராதபுரம் தலாவ பகுதியில் தாய் ஒருவர் தனது 2 வயது பெண் குழந்தையை கொலை செய்ததுடன் தானும் பெட்ரோல் ஊற்றி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பிந்துன்கட, ஹிதோகம, பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய தாயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இறந்தவர் தலாவ பிந்துன்கட, பகுதியில் உள்ள நுன் கடன் வழங்கும் சங்கத்தின் பொருளாளராக பணிபுரிந்தார், அங்கு பணம் குறைந்தமை தொடர்பில் சங்க உறுப்பினர்கள் அவரைக் குற்றம் சாட்டினர்.
மேலும் மற்றொரு குழு அவர் பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மனவிரக்தி அடைந்த பெண், குழந்தையை கொன்றுவிட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது கணவர் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த தாய் மற்றும் அவரது மகளின் சடலங்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
Post a Comment