Header Ads



19 வயது பெண் தாக்குதல், 31 வயது இளைஞர் பலி


வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பகுதியில் இளம் பெண் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் திருமணமான இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.


இந்தத் தாக்குதலை 19 வயது  இளம் பெண்ணொருவர் நடத்தியுள்ளதுடன், 31 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்தார்.


இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத நிலையில், வீரசேகரகம பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி தாக்குதலாக மாறியதாகவும், உயிரிழந்தவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


தாக்குதலை நடத்திய இளம் பெண், ஹல்தமுல்லவில் உள்ள சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், வெல்லவாய பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கத்திக்குத்துக்குப் பிறகு, அந்த இளைஞர் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்தார்.


கைது செய்யப்பட்ட இளம் பெண் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.