இஸ்ரேலின் 15 மாத கால யுத்தம் - 45,658 பாலஸ்தீனியர்கள் படுகொலை
காசா மீதான இஸ்ரேலின் போரில் குறைந்தது 45,658 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
காசா பகுதியில் இஸ்ரேலின் ஏறக்குறைய 15 மாத கால யுத்தம் தற்போது 45,658 பாலஸ்தீனியர்களை கொன்றுள்ளதுடன் மேலும் 108,583 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேர அறிக்கையிடல் காலப்பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, சமீபத்திய இறப்பு புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்பட்டன.
பெருமளவில் அழிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தின் பரந்த இடிபாடுகளில் 10,000 உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதால் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Post a Comment