Header Ads



12 லட்சம் ரூபாய்க்கு வாகனம் வாங்கலாமா..? NPP யை விமர்சிக்கும் அரசியலவாதி


சமகால அரசாங்கம் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியின் காரணமாக சாதாரண மக்கள் அதனை கொள்வனவு செய்ய முடியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். 


12 லட்சம் ரூபாய்க்கு ஒரு விட்ஸ் காரை வாங்க முடியும் என நளின் ஹேவகே தேர்தல் பிரசார மேடையில் குறிப்பிட்டிருந்தார். அதனை நம்பிய மக்கள், தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.


கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வசந்த யாப்ப பண்டார இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.


கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில், ஜப்பானிய விட்ஸ் வகை காரை இலங்கைக்கு 12 லட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் எனவும் அது இறக்குமதி செய்யப்பட்டால், அனைவரும் அதை வாங்க முடியும் என்றும் நலின் ஹேவகே தெரிவித்திருந்தார்.


எனினும் அந்த வாகனங்களுக்கு அரசாங்கம் சுமார் 70 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை வரி வசூலிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.


நாட்டில் ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினாலேயே மக்களால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.