கற்பிட்டி கடலில் 11 கிலோ தங்கத்துடள் சிலர் கைது
கற்பிட்டி - பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் 28 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 முதல் 45 வயதிற்கு இடைப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
கற்பிட்டி - பத்தலண்குண்டுவ கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான டிங்கி இயந்திர படகு ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்தனர்.
இதன்போதே, குறித்த இயந்திர படகில் தங்கம் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. குறித்த தங்கத்தை பறிமுதல் செய்த கடற்படையினர், அந்த இயந்திர படகில் பயணித்த மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், குறித்த தங்கம் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இயந்திர படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-
Post a Comment