Header Ads



சவுதியின் தாராள மனசு - 10 மில்லியன் டொலர்களை வழங்கியது


கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த பாலம், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சுமார் 100,000 மக்களின் பயணம் மற்றும் வணிக நடவடிக்கைகளை எளிதாக்கும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.


பேராதனை, பதுளை செங்கலடி வீதி அபிவிருத்தி திட்டத்திலிருந்து மீதமுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இது குறித்த திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் அப்துல் மொஹ்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

No comments

Powered by Blogger.