Header Ads



சிலரின் நடவடிக்கைகளினால் UNP கட்சியை இல்லாதொழிக்க முடியாது


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,  முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கு பின்னர் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராக நானே இருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 


நாடாளுமன்றத்திலும் ஐக்கிய தேசிய கட்சியிலும் பெரும்பான்மையானவர்கள் என்னுடனே இருக்கின்றனர் என்பது ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் அனைவரும் தெரிந்த விடயம்.


எனினும், கட்சியில் இருக்கும் ஒரு சிலரின் நடவடிக்கைகளினால் இந்த கட்சியை இல்லாதொழிக்க இடமளிக்க முடியாது.


ஐக்கிய தேசிய கட்சி என்பது மக்களின் கட்சி. இதனை பாதுகாக்க வேண்டும். இதில் இருந்த பலர் தற்போது வெளியில் சென்றாலும் அவர்களை நாங்கள் மீண்டும் ஒன்றிணைத்துக்கொள்ள வேண்டும்.


ஒருசிலரின் தற்காலிக திருப்திக்காக இந்த கட்சியை பணயக்கைதியாக இடமளிக்க முடியாது.


எமது நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியது ஐக்கிய தேசிய கட்சியாகும்.


அதனால் அந்த வேலைத்திட்டங்களை நாங்கள் மீண்டும் நாட்டில் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

No comments

Powered by Blogger.