அபாபீல் உதவும் கரங்கள் அமைப்பு, பிரான்ஸ் UFB ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாணத்தில் மனித நேயப் பணிகள்
1 வாழைச்சேனை, காவத்தமுனை அல் அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
2 வாழைச்சேனை மில்லத் முஸ்லிம் வித்தியாலயத்தின் 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இப்பாடசாலையில் கல்வி கற்கும் தாயை இழந்த இரு வறிய சகோதரிகளுக்கு அபாபீல் உறுப்பினர் ஒருவரால் பாதணிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் இப் பாடசாலைக்கு அதிபரின் வேண்டுகோளுக்குஇணங்க ஒரு நீர்த் தாங்கியும் அவ் உறுப்பனரால் வழங்கப்பட்டது.
3 சம்மாந்துறை மாவடிப்பள்ளியில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த 06 மத்ரசா மாணவர்களதும், உழவ இயந்திர சாரதியினதும் குடும்பங்களுக்கு சம்மாந்துறை பெரிய பள்ளிவாயல் ஜும்மாப் பள்ளியில் வைத்து பள்ளிவாசல் நம்பிக்கை சபை உறுப்பினர்களின் முன்னிலையில் நிதிக்கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
4 ஒலுவில் பிரதேசத்தில் விசேட தேவையுடைய இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட ஒரு வறிய குடும்பத்திற்கு அபாபீல் உறுப்பினர்களினால் ஒரு நிதிக் கொடுப்பனமும், பிள்ளைகளை பராமரிக்க தேவையான சில பொருட்களும் வழங்கப்பட்டன.
5 திருகோணமலை குச்சவெளியில் அமைந்துள்ள அந் நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 132 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுகள் யாவும் அபாபியில் உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் அமீன் அவர்களது வழிகாட்டலிலும், வெளிநாடுகளில் இணைப்பாளர்களாக இருக்கின்ற A. M. றம்ழான் (பிரான்ஸ்), M. S. அம்ஜத்கான் (ரொமேனியா), அன்ஸிர் , அல்ஹாஜ் சுபைர் (கட்டார்) ஆகியோர்களதும், உப தலைவர் யாழ் அசிம் ஆசிரியர் அவர்களதும், இணைப்பாளர்களான ராபி, தையூப், சலீம் ( நீர் கொழும்பு), அஷ்ஷேஃ அப்துல் மலீக் மன்பஈ,. L. M கம்மாஸி ( பொருளாளர்) ஆகியோர்களதும் ஆலோசனை வழிகாட்டுதலுடனும் செயலாளர் H. அமீர் அலி ஆசிரியர், சட்டத்தரணி ஜிபீன், உப செயலாளர் I. S. M. ரொக்கீஸ், உபபொருளாளர் அஸ்மீன், இணைப்பாளர்களான தாஹிர் ( பானந்துரை), றிஸ்லான் ( அரபா நகர் ) ஆகியோர்களது பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றன.
இன் நிகழ்வுகளுக்கு தமது முழுமையான பங்களிப்புகளை வழங்கிய அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாக!!
செயலாளர்,
அபாபீல் உதவும் கரங்கள்
Post a Comment