SJB தவிசாளரான இம்தியாஸ், தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட வேண்டும்
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் கட்சியின் செயலாளரை நியமித்தது போன்று கட்சியின் தவிசாளரான இம்தியாஸ் பாக்கிர் மாக்காரும் நியமிக்கப்பட வேண்டும். பாக்கிர் மாக்காரை நியமிக்காது தோல்வி அடைந்தவர எவரையாவது நியமித்தால் கட்சி மேலும் வீழ்ச்சி அடையும் என முன்னாள் தூதுவரும் பிரபல அரசியல் விமர்சகருமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தோல்வி பற்றி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைவதானது கட்சி மேலும் வீழ்ச்சியை நோக்கி செல்ல வழிவகுக்கும். வலதுசாரிகள் என்று முகாமிட்டு வருகை தந்தவர்கள் ஒருபோதும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்
Post a Comment