Header Ads



உகாண்டா பணம் - NPP எம்.பி.க்கு, காத்திருந்த அதிர்ச்சி


முகமூடி அணிந்த பெண் ஒருவர் NPP பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிடம் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் குறிப்பிட்டது போல் உகாண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு அவர்களின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


கலாசார நிகழ்வொன்றின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி, தற்போதைய விவகாரம் தொடர்பாக பல நையாண்டி கேள்விகளை எதிர்கொண்டார்.


இதன்போது குறித்த முகமூடி அணிந்த பெண் புதிய அரசாங்கம் மாற்றத்தைக் கொண்டு வருமா? உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள திருட்டுப் பணம் மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படுமா? எனக் கேட்டார்.


கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முகமாக எம்.பி. நிலாந்தி முறையே ஆம்! நிச்சயமாக செய்வோம் என்றார்.


உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்கள் குறித்து தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.