இனவாதத்துக்கு எதிராகவே NPP க்கு மக்களாணை கிடைத்தது - இனவாதம், மதவாதத்திற்கு எதிராகவே செயற்படுவோம்
மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை திட்டமிட்ட வகையில் திரிபுபடுத்தி வடக்கு - தெற்குக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவேற்றம் செய்தவர்களில் இருவர் புதிய ஜனநாயக முன்னணியின் செயற்பாட்டாளர்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கடந்த இருவார காலப்பகுதியில் இடம்பெற்ற கைதுகள் மற்றும் அதற்கான காரணங்களை சபைக்கு அறிவிக்க எதிர்பார்க்கிறேன்.
இனவாதத்துக்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்களாணை கிடைத்தது. தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து இன மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு ஆணை கிடைக்கப் பெற்றுள்ளது.
ஆகவே இனவாதம் மற்றும் மதவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவே செயற்படுவோம்.
Post a Comment