இழிவான தந்திரோபாயங்கள் - NPP பாராளுமன்ற உறுப்பினர் முறைப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன தன்னைப் பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டில் போலிச் செய்திகள் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஆதாரமற்ற கூற்றுக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை தனிப்பட்ட முறையில் இலக்கு வைத்தவர்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தீங்கிழைக்கும் மற்றும் தவறான செய்திகள் தொடர்பில் முறைப்பாடளித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இவ்வாறான விடயங்கள் மூலம் பெண்கள் அரசியலில் இணைவதை தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கௌசல்யா கூறியுள்ளார்.
இதுபோன்ற இழிவான தந்திரோபாயங்கள் பெண்கள் அரசியலில் சேருவதைத் தடுக்கும் என்று யாராவது நம்பினால், அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இந்த தந்திரங்களால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment