பதவிக்கு வந்து, 3 மாதங்களுக்குள் நாடு ஸ்த்திரம், வெளிநாடுகளும் நம்பிக்கை
இடைநிறுத்தப்பட்ட பல சர்வதேச மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் மூலம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஜயதிஸ்ஸ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வளமான ஆரம்பம் ஒன்றை அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் இலங்கை எதிர்பார்க்க முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் பங்குச் சந்தை சிறப்பாகச் செயற்படத் தொடங்கியுள்ளதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டினார்.
ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் இலங்கை நகர்கிறது என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார்.
அரசாங்கம் பதவியேற்று 03 மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment