Header Ads



நிசாம் காரியப்பர் Mp ஆக பதவியேற்பு


நிசாம் காரியப்பர் 10ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் இன்று (18) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.


ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.   

No comments

Powered by Blogger.