சஜித் மீது குற்றம்சுமத்தி ஒதுங்கிக்கொண்ட, முன்னாள் Mp
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசசில விடயங்களில் தனது வார்த்தையைக் காப்பாற்றத் தவறிவிட்டதாகக் கூறி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்குமார, அந்தக்கட்சியுடனான தனது உறவை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார, ஜனாதிபதித் தேர்தலின்போது, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
அத்துடன் அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்தநிலையில் சஜித் பிரேமதாச அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதாக ஜகத்குமார கூறியுள்ளார்.
இருப்பினும், சஜித் பிரேமதாச தனது வார்த்தையைக் காப்பாற்றவில்லை என்றும், தம்மை இப்போது அவரைப் புறக்கணித்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தாம் இனிவரும் காலத்தில், சுதந்திரமாக அரசியலில் தொடரப்போவதாக ஜகத்குமார தெரிவித்துள்ளார்.
Post a Comment