புதிய சபாநாயகராக Dr ஜகத் - பிரதி சபாநாயகராக Dr ரிஸ்வி பதவியைத் தொடருவார்
புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உயர் வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தின.
ஆளும் கட்சியின் எம்.பி.க்கள் குழு இன்று (16ம் திகதி) கூடி இந்த இறுதி முடிவை எடுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் Jaffna Muslim இணையத்திற்கு தெரிவித்தன.
கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிரதி சபாநாயகராக ரிஸ்வி சாலிஹ் தனது பதவியைத் தொடருவார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல, கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment