Header Ads



பாராளுமன்றத்திற்குச் சென்ற சிறப்பு CID குழு


பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற அதிகாரிகளிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


அதற்காக அந்த துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு நேற்று பாராளுமன்றத்துக்கு வருகைதந்தது.


இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மூன்று பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.


அந்தத் தகவல்கள் இணையத்தளத்தில் இடம்பெற்றமைக்கு அடிப்படையாகக் கூறப்படும் பல கடிதங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் பாராளுமன்ற அதிகாரிகள் கையளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் வைத்திய கலாநிதி என்ற பட்டத்தை குறிப்பிட்டு தனக்கு அவதூறு ஏற்படுத்தியதாக சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி, சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.AN


No comments

Powered by Blogger.