Header Ads



இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள தாயும், மகளும்


இலங்கையில் இருந்து வெளிநாட்டுப் பெண்ணும் அவரது மகளும் நாடு கடத்தப்படவுள்ளனர்.


நத்தார் பண்டிகையை முன்னிட்டு களுத்துறை சிறைச்சாலையில் இருந்த கைதிகள் சிலர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.


பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 பேர் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.


விடுவிக்கப்பட்ட கைதிகளில் ரஷ்ய பெண் ஒருவரும் அவரது 4 வயது மகளும் அடங்குவதாக சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு பெண்ணுக்கு களுத்துறை நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் வெலிசர குடிவரவு தடுப்பு முகாமில் ஒப்படைக்கப்பட்ட மகளும் பெண்ணும் எதிர்வரும் நாட்களில் ரஷ்யாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


குறித்த இரண்டு ரஷ்ய பிரஜைகளும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.