Header Ads



மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்


(அஷ்ரப் ஏ சமத் )


இலங்கை பத்திரிகையாளர் சங்கம் 69 ஆண்டு விழாவில்  சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் 10 பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் குருலு கூச்சனா காரியகரவனா தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் 17 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஊடக தகவல் துறை பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக்க விஜயமுனி அவர்கள் கலந்து கொண்டார். காரிய கர்ண நினைவரங்கம் இம்முறை  சிரேஸ்ட ஊடகவியலாளர் களான  தயா லங்காபுர (முன்னாள் சிலுமின பத்திரிகையின் இணை ஆசிரியர் என்.எம் அமீன் (லேக் ஹவுஸ் தினமின தினகரன் பிரதி ஆசிரியர் நவமனி உதயன் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபகத் தலைவர்)இ வி தனபாலசிங்கம்  (தினக்குரல் முன்னாள் பிரதம ஆசிரியர்)  திருமதி சீலா விக்கிரமரமசிங்கஇ (சிரேஸ்ட ஊடகவியலாளர்)  பி.பி. இலங்கசிங்க(சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர்)  ஸ்டான்லி சமரசிங்கஇ (சிங்கள மற்றும் ரூபவாகினி செய்தி ஆசிரியர்)  எஸ்.எஸ் செல்வநாயகம்  தினபதி,சிந்தாமணி  ஆசிரியராக பணியாற்றியவர் துசித்த மலலசேகர  சிரேஷ்ட ஊடகவியலாளர்  அலேக்சாந்திர பாலசூரிய இ சிரேஷ்ட புகைப்பட கலைஞர் ஊடகவியலாளர் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


கடந்த 69 வருடங்களாக  இந்த நாட்டில் தலைசிறந்த ஊடகவியலாளர்கள் ( பத்திரிகை ஆசிரியர்கள் செய்தி ஆசிரியர்கள்) பல தசாப்தங்களாக இந்த நாட்டின் சிறப்பான  ஊடகப் பணி செய்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பணப் பரிசில் வழங்கி இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் கௌரவித்து வருகின்றமை பாராட்டக்குரியது. இந்த நாட்டின் சிங்கள  மூத்த பத்திரிகையாசிரியர் காலம் சென்ற  காரியகர்வன்ன அவர்கள் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 1955ல் ஸ்தாபித்தார்கள்.  இன்று 69 வருடமாக பாராட்டு நிகழ்வை  இந்த நிறுவனம் செய்வது  தமிழ் முஸ்லிம் சிரேஸ்ட எழுததாளர்கையும் இனம் கண்டு அவர்களையும் கௌரவித்து வருகின்றமை குறிப்பிடததக்கதாகும்  பேராசிரியர் டியுட்டர்  அவர்கள் நவீன ஊடகம் பற்றிய பிரதான உரை நிகழ்த்தினார்கள்.

No comments

Powered by Blogger.