கால்வாயில் இருந்து புதிதாக, பிறந்த குழந்தையின் உடல் மீட்பு
அங்குலான ரயில் நிலைய வீதியில் உள்ள கால்வாயில் புதிதாகப் பிறந்த சிசு ஒன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால்வாயில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த இருவருக்கு குறித்த சிசுவின் சடலம் இன்று (16) கிடைத்துள்ளது.
குறித்த இருவரும் கால்வாயில் இருந்து குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் உர மூட்டை ஒன்று காணப்பட்டுள்ளது.
குறித்த உரை மூட்டையில் மற்றொரு பையில் இருந்து குறித்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் இது தொடர்பில் குறித்த 2 பேரும் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, பொலிசார் வந்து, குறித்த சடலம் புதிதாக பிறந்த சிசு ஒன்றினுடையது என்பதை உறுதி செய்தனர்.
கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் வந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் மொரட்டுவை பதில் நீதவான் வந்து சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
சிசுவின் சடலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கால்வாயில் வீசப்பட்டதாகவும், சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment