இங்குதான்.. இங்குதான்..
இங்குதான் இமாம் இப்னு ஹஸ்ம் மக்களை வைத்து பாடம் படிப்பித்துக் கொடுத்தார். இந்த இடம் முன்னொரு காலம் மக்கா மதீனா பள்ளிவாசல்களுக்குப் அடுத்தபடியாக மக்கள் கூடும் பெரும் அறிவுக்கூடமாக இருந்தது.
இந்த இடத்தில்தான் இமாம்களான இப்னு அப்துல் பர், ஷாதிபி, ஹிஜாஸி, ஹுமைதி, இப்னு அப்து ரப்பிஹ், இப்னு ஹுஜ்ஜா போன்றோர் அழுது தொழுது அமர்ந்து வாழ்ந்தார்கள். இது 500 க்கும் மேற்பட்ட ராட்சத தூண்களைக் கொண்ட அதிநுட்பமான கட்டிடக்கலையாக இருக்கிறது.
இங்குதான் இமாம்களான இப்னு ஹய்யான், இப்னு ஸைதூன் இப்னு ருஷ்த், இப்னு பைத்தார், போன்ற பலர் பயின்று பட்டம் பெற்றார்கள். இங்கே ஒரு காலம் கலைஞானங்களான ஆன்மிகம், மார்க்கவியல், புவியியல், வானவியல், தாவரவியல், சமூகவியல், மருத்துவம், விஞ்ஞானம், இலக்கணம், இலக்கியம் என எல்லாம் கொடி கட்டப் பறந்தன.
இங்குதான் மாவீரர் ஹாஜிப் பின் மன்ஸுர் படையோடு வந்து படைத்தவனை பிரார்த்திப்பார். இந்த இடம் ஒரு காலம் ஐரோப்பாவில் கம்பீரத்தின் சின்னமாக இருந்தது.
இங்குதான் மாமன்னர் அப்துர் ரஹ்மான் தாஹில் பரிவாரத்தோடு வந்து பணிவோடு வழிபடுவார். அவர்தான் இதனை கி. பி 786 ஆம் ஆண்டு அழகிய தோற்றத்தில் கட்டியமைத்தார்.
இந்த இடம் முஸ்லிம்கள் 500 வருடங்களாக ஒரே அணியில் நின்று ஏக இறைவனை வணங்கி வழிபடும் பள்ளிவாசலாக இருந்தது. இப்போது இந்த இடம் (திரித்துவம்) மூன்று தெய்வங்கள் வணங்கப்படும் தேவாலயமாக மாற்றப்பட்டுவிட்டது.
இந்த இடம் ஒரு காலம் ஏக அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கும் ஆலயமாக இருந்தது. இப்போது இந்த இடம் மணி ஒலிக்கும் தேவாலயமாக மாற்றப்பட்டுவிட்டது.
#கோர்டோபா_பள்ளிவாசல்_ஸ்பென்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment