அமெரிக்க உதவி செயலாளர் - சஜித் சந்திப்பு, சிறுபான்மை பிரதிநிதிதிகளும் இணைந்தனர்
சமகால இலங்கையின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு கவனம் செலுத்தினர்.
USAID நிறுவனத்தின் ஆசியப் பணியகத்திற்கான பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கவுர், விர்சா பெர்கின்ஸ் (டொனால்ட் லூவின் பணிக்குழாம் பிரதானி), USAID நிறுவனத்தின் இலங்கை பணியகத்தின் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ் Gabriel Grau,
USAID இலங்கைப் பணியகத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான Asta Zinbo, தென் ஆசியாவிற்கான திறைசேரியின் செயலாளர் ஜெரோட் மேசன் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் விவகார விசேட நிபுணர் நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
அதேபோல், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகாம்பரம், அஜித் பீ பெரேரா, முஜிபுர் ரஹுமான், காவிந்த ஜயவர்த்தன் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Post a Comment