எரிபொருள் தட்டுப்பாடு எக்காரணத்தைக் கொண்டும் இடம்பெறாது
இன்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அதன்படி நாட்டில் போதிய எரிபொருள் காணப்படுவதாகவும், நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கத்தின் நிறுவனமாக அந்தப் பொறுப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்வதாகவும் தலைவர் ஜனக ராஜகருணா சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு எவ்வித சிக்கலும் இன்றி வலுசக்தியின் அவசியத்தை பேணுவதற்கு முடியும் என்றும், தற்போது எரிபொருள் குறைவடைந்ததும், உடனடியாக யுனைடெட் பெற்றோலியத்தின் 64 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருளை விநியோகிப்பதற்கு அமைச்சின் செயலாளர், யுனைட்டட் பெற்றோலியம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியன ஒன்றிணைந்து இது தொடர்பாகக் கலந்துரையாடி தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
Post a Comment