Header Ads



பெற்றோல், டீசல் விலைகளின் நிலவரம் (முழு விபரம்)


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.


அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.


இதேவேளை, பெற்றோல் மற்றும் டீசல்  விலைகளில் எவ்விதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் அறிவித்துள்ளது.


இதேவேளை, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் சிபெட்கோவின் எரிபொருள் திருத்தத்திற்கு அமைய செயற்படுவதாக அறிவித்துள்ளன.

No comments

Powered by Blogger.