Header Ads



அரசாங்கம் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை


தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.


குறிப்பாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.


கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வட் வரியிலிருந்து விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.


எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுக்களின்படி இவ்வாறு வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு என சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கம் வருமான இலக்குகளை பூர்த்தி செய்தால் வரிகளை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் வரிகளை குறைத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகளை அடைவதில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அடுத்த ஆண்டுக்கான வருமான இலக்குகளை அடைவதற்கு அரச செலவுகளை கட்டுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல எனவும் வரிகளை தொடர்ந்தும் அறவீடு செய்ய நேரிடும் எனவும் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.