ருஜினவும், சாகரிகாவும் மோதல்
ரஜரட்ட ருஜின மற்றும் சாகரிகா ரயில் இயந்திரங்கள் இன்று -15- ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்து தொடர்பில் ரயில்வே திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பெலியத்தையிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ருஜின ரயில் இயந்திரத்தை மாற்றும் போது தவறான பாதையில் பயணித்தமையினால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாகரிகா ரயிலுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் சாகரிகா ரயில் பலத்த சேதமடைந்தது.
அந்த ரயிலை நாளை (16) காலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment