கோழி இறைச்சியை, இலஞ்சமாக பெற்றவர்கள்
1,170 ரூபாய் பெறுமதியான கோழி இறைச்சி கிலோவொன்றை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 2 பேர் இலஞ்சமாக எதிரான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேவல்தெனிய உப அலுவலகத்தில் சேவையாற்றும் பதில் இறைவரி அதிகாரி ஒருவரும், வீதி பிரிவில் பணிபுரியும் தொழிலாளி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த இருவரும் கைதாகினர்.
வர்த்தக நிலையம் ஒன்றின் 2025 ஆம் ஆண்டுக்கான வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த கோழி இறைச்சி இலஞ்சமாக கோரப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரின் வர்த்தக நிலையத்திற்கு அருகில் வைத்து கைதான குறித்த இருவரும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Post a Comment