யாழ்ப்பாணத்தில் உலக சுற்றுலாதின கலை, கலாச்சார, வாகன ஊர்தி, நடைபயண நிகழ்வு
வடமாகாண அமைச்சின் ஏற்பாட்டில், "சுற்றுலாவினை மேம்படுத்தி எதிர்காலத்தில் மாற்றத்தினை உருவாக்குவோம்" என்னும் கருப்பொருளில் உலக சுற்றுலா தின கலை கலாச்சார வாகன ஊர்தி நடை பயண நிகழ்வு நடைபெற்றது.
இந்த வாகன ஊர்தி நடை பயணம் யாழ்ப்பாணம் பொது நூலக முன்றலில் ஆரம்பமாகி அங்கியிருந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி ஊடாக சென்று யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் நிறைவடைந்துள்ளது.
மேலும் வாகன பவனியில் 1968 தொடக்கம் 2001ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மாதிரி புகையிரத வண்டி என்பன ஈடுபட்டுள்ளன.
Post a Comment