அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய, கொழும்பு நீதிமன்றத்தினால் பகிரங்க பிடியாணை
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பெர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட அஜான் ஹார்திய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று(19) பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி சம்பவம் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு இணையாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் நீதவானினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணைமுறி கொள்வனவின் ஊடாக அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் சந்தேகநபர்கள் 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் சந்தேகநபரான அர்ஜுன் அலோசியஸை அடுத்த வழக்கின் போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment