Header Ads



எனது தந்தை இலங்கை பொலிஸ் உதைபந்தாட்ட அணி தலைவர், புலிகளில் இணைந்தார், காணாமல் போனார்


 யாழ் மாவட்ட சுயேட்சை குழு பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (04) பாராளுமன்றத்தில் தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்து உரை நிகழ்த்தினார்.


இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,


"இந்த நேரத்தில் எனது தந்தையை நினைவு கூர விரும்புகிறேன். 1966ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் உதைபந்தாட்ட அணியின் தலைவராக இருந்தார். 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக எமது குடும்பம் யாழ்ப்பாணத்திற்கு செல்ல நேர்ந்தது. பின்னர் LTTE அமைப்பின் பொலிஸில் அவர் கடமையாற்றினார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் பதவிய வைத்தியசாலையில் இருந்து எனது தந்தை காணாமல் போனார்." என்றார்.

No comments

Powered by Blogger.