Header Ads



ரோகிங்யா அகதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள, விமானப்படை முகாம் 'தடுப்பு மையமாக' பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி வெளியானது


இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை "தடுப்பு மையமாக" பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபாலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது. முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக செவ்வாய்க்கிழமை (31) முதல் இயங்கவுள்ளது.


கடற்படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.