Header Ads



இஸ்ரேலின் கூலிப்படைகளுக்கு இலங்கையில் பயிற்சியா..? அபாயமும், பின்புலமும்


- லத்தீப் பாரூக்

தமிழில்: சப்ரி அஹமட் -


கடந்த 14 மாதங்­க­ளுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்­சாரம் உள்­ளிட்ட உயிர் வாழ்­வ­தற்­குத் ­தேவை­யான அனைத்தும் பறிக்­கப்­பட்ட நிலையில் அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்­மனி போன்ற நாடு­களால் விநியோ­கிக்­கப்­பட்டு வீசப்­படும் 85,000 தொன் இற்கும் அதி­க­மான குண்­டு­க­ளாலும் இஸ்­ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயு­தங்­க­ளி­னாலும் இன்­று­வரை காசா, பலஸ்தீன் மக்­களின் மீதான படு­கொலை தாக்­கு­தல்கள் தினம் தினம் அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த அப்­பட்­ட­மான இனப்­ப­டு­கொ­லைக்கு அமெ­ரிக்­காவின் அடி­வ­ரு­டி­க­ளாக செயற்­படும் சில முஸ்லிம் அரபு நாடு­களும் உடந்­தை­யாக உள்ளன.


இரண்டாம் உல­கப்­போ­ருக்­குப்­பின்னர் மனி­த­குல வர­லாற்றில் நடை­பெற்ற மிக மோச­மான இனச்­சுத்­தி­க­ரிப்­பாகக் கரு­தப்­படும் இத்­தாக்­கு­தல்­கள்­ கா­ர­ண­மாக இஸ்­ரே­லினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள பலஸ்­தீ­னப்­பி­ர­தே­ச­மா­னது உலகின் மிகப்­பெ­ரிய அக­தி­கள்­ மு­கா­மாக மாற்றம் பெற்று இது­வரை சுமார் 44,000 இற்கும் அதி­க­மான பலஸ்­தீ­னர்­களை கொன்று குவித்­த­தன்­மூலம் இன்று அது மாபெரும் மயான பூமி­யாக காட்­சி­ய­ளிக்­கி­றது.கொல்­லப்­பட்ட மக்­களில் மூன்றில் இரண்டு பங்­கினர் பெண்கள் மற்றும் குழந்­தைகள். இதில் எஞ்­சி­ய­வர்கள் குடிநீர், சுகா­தாரம் உள்­ளிட்ட அடிப்­படை வச­திகள் எது­வு­மற்று தத்­த­மது உயிர்­களை மட்டும் காப்­பாற்­றி­ய­வர்­க­ளாக திறந்­த­வெ­ளியில் தற்­கா­லிக கொட்­டில்­களில் வாழ நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர்.


போர்க்­குற்­றங்­களுக்காக உலகின் பெரும்­பா­லான நாடுகள் இஸ்­ரேலை புறக்­க­ணித்து வரு­கின்­றன. இதில் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாக, சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் இஸ்ரேல் பிர­தமர் பென்ஞ்­சமின் நெதன்­யாகு மீது போர்க்­குற்றம் சுமத்தி அவரை கைது செய்­வ­தற்­கான பிடி­வி­றாந்தை பிறப்­பித்­துள்­ளது.


பலஸ்தீன் மீது கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்ள இக் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மா­னது மேற்­கு­லகில் உள்ள யூதர்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் உட­ன­டி­யாக போர் நிறுத்தம் செய்­யக்­கோரி முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து கொள்ள வேண்­டிய கட்­டா­யத்திற்கு தள்ளியுள்­ளது. இஸ்­ரே­லிய போர் குற்­றங்­க­ளுக்கு முடிவு கட்டக் கோரி உல­கெங்­கிலும் ஆர்ப்­பாட்­டங்­களும் எதிர்ப்புக் கோஷங்­களும் எழுப்­பப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக பல மேற்கு நாடு­களின் தலை­ந­க­ரங்­களில் இவை தின­சரி நிகழ்­வாகிவிட்டன. அந் நாட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­களில் முன்­னெ­டுக்­கப்­படும் இஸ்­ரே­லிய எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­களை நசுக்க எடுக்கும் முயற்­சி­களால் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் போர்க்­க­ளங்­க­ளாக மாறி­யுள்­ளன.

மனித குலத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் இஸ்­ரேலின் அட்­டூ­ழி­யங்­களால், இறை­மை­யுள்ள நாடாக இருந்த பலஸ்­தீன நிலத்தின் மீது 1948 ஆம் ஆண்டு யூத சியோ­னிச சதிகள் மூலம் ஆக்­கி­ர­மித்து உரு­வாக்­கப்­பட்ட இஸ்­ரே­லினை, ஐக்­கிய நாடுகள் சபையில் இருந்து வெளி­யேற்ற வேண்டும் என்ற கோஷங்­களும் முன்­னரை விட தற்­போது வலுப்­பெற்று வரு­கின்­றன.


இவ்­வாறு உல­கமே இஸ்­ரேலை ஒதுக்கித் தள்ளும் இந்தப் பின்­ன­ணியில், இலங்­கையின் ஹிக்­க­டுவை மற்றும் அரு­கம்பை பகு­தி­களில் பலஸ்­தீ­னத்தில் இனப்­ப­டு­கொலை செய்யும் இஸ்­ரே­லிய படை­க­ளுடன் இணைந்து போரி­டு­வ­தற்­காக பல்­வேறு உலக நாடு­க­ளி­லி­ருந்தும் அழைத்து வரப்­பட்­டுள்ள கூலிப்­ப­டை­க­ளுக்கு பயிற்சி முகாம்கள் நடாத்­தப்­ப­டு­வ­தாக அதிர்ச்சி தரும் அறிக்­கைகள் வெளி­யா­கி­யுள்­ளன. அதிலும் குறிப்­பாக அரு­கம்பை, எல்ல மற்றும் வெலி­கம போன்ற பிர­தே­சங்­களில் இவர்­க­ளது சட்ட விரோத செயற்­பா­டு­களின் பிர­சன்னம் தொடர்பில் உள்ளூர் ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றன.


மேலும் தெஹி­வளை உள்­ளிட்ட நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் “சபாத்” (Chabad) என்று அழைக்­கப்­படும் யூதர்­களின் வழி­பாட்டுத் தலங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

தற்­போது வெளி­வ­ரு­கின்ற அறிக்­கை­களின் படி, இலங்­கையின் உள்­நாட்டு சட்­டங்­க­ளுக்கு மாற்­ற­மாக இஸ்­ரே­லி­யர்கள் சொத்­துக்­களை வாங்­கு­கி­றார்கள், ஹோட்­டல்­களை கட்­டு­கி­றார்கள் மற்றும் இலங்­கையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதில் உள்ளூர் மக்­களை வேலைக்கு அமர்த்தி அவர்­களை பலஸ்­தீ­னிற்கும் ஹமா­சிற்கும் எதி­ரான மனோ­பாவம் உடை­ய­வர்­க­ளாக மூளைச்­ச­லவை செய்­வதில் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றனர்.


இன்று பலஸ்­தீனில் இஸ்ரேல் மேற்­கொள்ளும் போர்க்­குற்­றங்­களை பிர­தான ஊட­கங்­களில் வெளி­வரா வண்ணம் தடுக்கும் முயற்­சி­க­ளிலும் இஸ்­ரே­லிய முக­வர்கள் ஊடு­ருவி செயற்­ப­டு­கின்­றனர். குறிப்­பாக தின­சரி இடம் பெறும் பலஸ்தீன் காசா அழி­வுகள் தொடர்பில் இலங்­கையின் முன்­னிலை ஊட­கங்­களில் செய்­திகள் இருட்­ட­டிப்பு செய்து வெளி­யி­டப்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­யது. இதன் மூலம் நாட்டு மக்­க­ளுக்கு இஸ்­ரேலின் மனித குலத்­திற்கு விரோ­த­மான செயற்­பா­டுகள் தொடர்பில் மிகக் குறைந்த தக­வல்­களே வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.


உதா­ர­ண­மாக, இலங்­கையில் ஒளி­ப­ரப்­பப்­படும் பியோ டீவி (Peo TV) இன் “செனல் 97” மூல­மாக இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வா­கவும் யூத அரசை மிகவும் அமை­தியை விரும்பும் ஒரு நாடா­கவும் காண்பிக்கும் வகையில் அப்­பட்­ட­மான பொய்­க­ள் பரப்பப்­ப­டு­கின்­றன. ஆத­ர­வற்ற பலஸ்­தீன மக்கள் மீதான போர், படு­கொ­லைகள், மனித அவ­லங்கள் மற்றும் அழி­வு­க­ளுக்குப் பின்னால் இஸ்­ரே­லிய அரசு உள்­ளது என்ற உண்­மையை இந்த ஒளி­ப­ரப்பு அலை­வ­ரிசை மூடி மறைக்­கின்­றது.


மேலும் ஒரு எடுத்­துக்­காட்­டாக, யூடியூப் சமூக வலைத்­த­ளத்தில் ஒரு சிங்­களப் பெண்­மணி யூதர்­களை மிகவும் மனி­தா­பி­மா­ன­மு­டைய மக்கள் என்றும் பலஸ்­தீ­னர்­க­ளையும் அவர்­களின் பிர­தி­நி­தி­யான ஹமா­ஸினையும் மிகவும் மோச­மாக சித்­த­ரித்து விவ­ரிக்கும் காட்­சி­க­ளையும் காணக் கூடி­ய­தாக உள்­ளது.


அண்­மையில் கிழக்கு மாகாணம் மட்­டக்­க­ளப்பில் சியோ­னிச சார்புப் பேரணி ஒன்றை யூத முக­வர்கள் ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர். அதே வேளை, இலங்­கை­யி­லி­ருந்து தொழி­லுக்­காக அனுப்­பப்­பட்ட சுமார் 10,000 பேருக்கு அதி­க­மான மனித வளங்கள் இஸ்­ரேலின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மேலும் கடந்த ஆட்­சியில் இலங்கை இஸ்­ரே­லுடன் பல புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளிலும் கைச்சாத்­திட்­டுள்­ளது.


இலங்­கையில் யூத வழி­பாட்டுத் தலங்­களை அமைப்­ப­தற்கும் பல்­வேறு நாடு­களில் இருந்து அழைத்து வரப்­படும் கூலிப்­ப­டை­யி­ன­ருக்கு இலங்­கையில் இரா­ணுவப் பயிற்சி வழங்­கு­வ­தற்கும் பொறுப்­பா­கவிருக்கும் இஸ்­ரே­லிய முக்­கிய புள்ளி ஒரு­வ­ருக்கு இலங்கை இராணுவம் பாது­காப்பு வழங்­கு­வ­தாக மற்­று­மொரு அதிர்ச்சித் தக­வலும் வெளி­யா­கி­யுள்­ளது.


இது கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக இடம் பெறு­வ­தாக யூடியூப் அறிக்­கை­யொன்றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.


Kader Master (காதர் மாஸ்டர்) என்ற யூடி­யூ­பரின் தக­வ­லின்­படி இஸ்­ரே­லிய தனியார் பாது­காப்பு நிறு­வ­னங்­களால் பயிற்சி மையங்கள் நடத்­தப்­ப­டு­வ­தா­கவும் “சபாத்” எனப்­படும் இஸ்­ரே­லிய வழி­பாட்டுத் தளங்­களில் ராணுவப் பயிற்சி வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


மேலும் இது தொடர்­பான ஒரு மிக முக்­கிய செய்­தி­யாக, ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தா­பிக்­கான சபாத் தூது­வ­ரான ரப்பி ஸ்வி கோகன் (Rabbi Zvi Kogan )கடந்த மாதம் கடத்­தப்­பட்டுக் கொல்­லப்­பட்டார். ஐக்­கிய அரபு அமீ­ரக அதி­கா­ரிகள் இது முன்­கூட்­டியே திட்­ட­மிட்ட ஒரு கொலைத் தாக்­குதல் என்று தெரி­வித்­தனர்.


“சபாத்” இஸ்­ரே­லிய உளவுப் பிரி­வான மொசாட்டின் ஒரு முன்­னிலை அமைப்­பாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் அறிக்­கைகள் தெரி­விக்­கின்­றன. இதே­வேளை மொல்­டோ­விய நாட்டு வம்­சா­வளி இஸ்­ரே­லி­ய­ரான கோகன் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்­பித்­த­தி­லி­ருந்து சமூக வலைத்­த­ளங்­களின் பல­மான எதிர்ப்­புக்கு இலக்­கா­கி­யி­ருந்தார்.

இலங்­கையை பொறுத்­த­வ­ரையில் இந்த விட­ய­மா­னது இஸ்ரேல் தொடர்பில் காலம் கால­மாக ஆட்சி செய்த முன்­னைய அர­சாங்­கங்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த நட­வ­டிக்­கை­களின் பிரதி பல­னாக தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு தோற்­று­விக்­கப்­பட்­டுள்ள ஒரு நெருக்­க­டி­யா­கவே தோன்­று­கின்­றது. எவ்வாறாயினும், இலங்கையின் சமூக மத நல்லிணக்கத்தையும், நாட்டின் தற்போதைய அமைதிச் சூழ்நிலையையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இவ்விடயம் தொடர்பில் தீர ஆராய்ந்து சட்டவிரோத சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் யூதர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.


இலங்­கையில் சில காலங்­க­ளுக்கு முன்பு முடுக்கி விடப்­பட்ட முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­மு­றையும் இஸ்­லாத்தை பூதா­க­ர­மாக சித்­த­ரிக்கும் பல்­வேறு நிகழ்­வு­களும் நடை­பெற்ற போது இந்­துத்­துவ பாசிச அமைப்­பான ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு கட்­ட­மைப்­பு­களின் பிர­சன்னம் ஒரே நேரத்தில் நிகழ்ந்­தது ஒரு தற்­செயல் நிகழ்­வல்ல என எண்ணுவது ஆச்சரியமன்று.


இதேவேளை இலங்கையில் பல அப்பாவி கிறிஸ்தவ மக்களின் படுகொலைக்குக் காரணமான ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்புலத்தில் இப்புனிதமற்ற சக்திகளின் கூட்டணிச் செயற்பாடுகளும் உள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.- Vidivelli

No comments

Powered by Blogger.