ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றதா..? விசாரணை ஆரம்பிக்க தீர்மானம்
ஜனாதிபதி நிதியத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் நேற்று(23) முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் அமைப்பினால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment